Wednesday, 20 October 2010

தேங்காய் பால் சாதம் - Coconut Milk Rice

தேங்காய் : 2 மூடி
பாஸ்மதி அரிசி : 2 1\2 கப்
பூண்டு : 3 பல்
வெங்காயம் : 3 நீளவாக்கில் அரிந்தது
பச்சை மிளகாய் : 7
பட்டை : 2
லவங்கம் : 2
ஏலக்காய் : 2
முந்திரி : 6
எண்ணெய் மற்றும் நெய் : 20 கிராம்
உப்பு
செய்முறை :
பூண்டை தனியாக அரைக்கவும். ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் கொதிக்க வைக்கவும். தேங்காயை துருவி பச்சை மிளகாயுடன் அரைத்து கொதிக்க வைத்த நீரை சேர்த்து பால் எடுக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிரஷர் பான் யை சூடு படுத்தவும் பிறகு அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,லவங்கம்,ஏலம் சேர்த்து தாளிக்கவும், பிறகு முந்திரி சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும், நிறம் மாறியவுடன் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். அடி பிடிக்காமல் இருக்க சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு தேங்காய் பாலை சேர்க்கவும், ரொம்ப கொதிக விடாமல் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். லேசாக கொதி வந்ததும் மீதி உப்பை சேர்த்து பிரஷர் பான் யை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
இதற்கு சிறந்த சைடு டிஷ் உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை:
வேகவைத்த உருளை 2
குழம்பு தூள் அல்லது சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
வெங்காயம் அரிந்தது 1
தக்காளி 1
கறிவேய்பில்லை
உப்பு
எண்ணெய்
கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேய்பில்லை, வெங்காயம், தக்காளி என்று ஒன்று ஒன்றாக சேர்த்து வதக்கவும். பிறகு குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். உருளையை வெட்டி சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து வதக்கவும். கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.

Saturday, 16 October 2010

பீர்க்கங்காய் துவையல்

சுலபமாக செய்ய கூடிய துவையல்
பீர்க்கங்காய் – கால் கிலோ (தோல் சீவி தனியாக எடுக்கவும்)
உளுத்தம் பருப்பு – 3 டீ ஸ்பூன்
மிளகாய் – 3
புளி – சிறு கோலி அளவு
உப்பு
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
செய்முறை :
பீர்க்கங்காய் தோலை நன்றாக கழுவவும். எண்ணெய் சட்டியில் எண்ணெய் விட்டு தனி தனியாக உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, ஏலதையும் வறுக்கவும். பிறகு கடைசியாக தோலை போட்டு நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி ஆறவைத்து உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்தால் fridgeல் 3 நாளைக்கு கெடாமல் இருக்கும்.
இது சாதத்துடன் நல்லஎண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம், இட்லி தோசைக்கு கூட அருமையாக இருக்கும்.

Thursday, 7 October 2010

இட்லி சாம்பார் - Idly Sambar

தேவையானவை :


வேகவைக்க:


கத்திரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 1 
காரட் - 1
பச்சைமிளகாய் - 5
வெங்காயம் - 1
தக்காளி - 5 
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
மஞ்சள் பொடி
உப்பு
 ----------------------------------
சாம்பார் மேல் பொடி -  2 ஸ்பூன்
இட்லி மாவு - 3 ஸ்பூன்
வெல்லம் (Optional)


தாளிக்க:


கடுகு
வெந்தயம்
சீரகம்
பெருங்காயம்
கருவேப்பில்லை
--------------------------------------
கொத்தமல்லி தழை


செய்முறை :

காய்களை கழுவிவிட்டு சிறியதாக அரிந்து பருப்பு, உப்பு, பச்சை மிளகாய்,மஞ்சள் பொடியுடன் தண்ணீர் சேர்த்து Cooker ல் 3 விசில் வைக்கவும்.

Pressure இறங்கியவுடன் நன்கு மசித்து விட்டு (இப்போது இது கெட்டியாக இருக்கும்) தேவையான தண்ணீரில் சாம்பார் மேல் பொடியை கரைத்து கலக்கவும்.

அதில் 3 ஸ்பூன் இட்லி மாவு சேர்த்து நன்கு கலக்கவும் , பிறகு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து கொதிக்கவைக்கவும்.

கடைசியாக கொத்தமல்லியை சேர்க்கவும்.

சூடான இட்லி, தோசை, பொங்கலுடன் பரிமாறவும்.


சாம்பார் மேல் பொடி தயாரிக்க


காய்ந்த கொத்தமல்லி/தனியா - 1 கைப்பிடி
கடலை பருப்பு - 1 கைப்பிடி
சீரகம் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5


மேல் சொன்னவற்றை தனி தனியாக வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும்.


இது மூன்று மாதத்திற்கு கெடாது.




இது மற்ற சாம்பார் செய்யும் போது ஒரு ஸ்பூன் சேர்த்து செய்தால் வாசனை கூடும்.