Showing posts with label தேங்காய் சமையல். Show all posts
Showing posts with label தேங்காய் சமையல். Show all posts

Wednesday, 20 October 2010

தேங்காய் பால் சாதம் - Coconut Milk Rice

தேங்காய் : 2 மூடி
பாஸ்மதி அரிசி : 2 1\2 கப்
பூண்டு : 3 பல்
வெங்காயம் : 3 நீளவாக்கில் அரிந்தது
பச்சை மிளகாய் : 7
பட்டை : 2
லவங்கம் : 2
ஏலக்காய் : 2
முந்திரி : 6
எண்ணெய் மற்றும் நெய் : 20 கிராம்
உப்பு
செய்முறை :
பூண்டை தனியாக அரைக்கவும். ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் கொதிக்க வைக்கவும். தேங்காயை துருவி பச்சை மிளகாயுடன் அரைத்து கொதிக்க வைத்த நீரை சேர்த்து பால் எடுக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிரஷர் பான் யை சூடு படுத்தவும் பிறகு அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,லவங்கம்,ஏலம் சேர்த்து தாளிக்கவும், பிறகு முந்திரி சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும், நிறம் மாறியவுடன் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். அடி பிடிக்காமல் இருக்க சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு தேங்காய் பாலை சேர்க்கவும், ரொம்ப கொதிக விடாமல் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும். லேசாக கொதி வந்ததும் மீதி உப்பை சேர்த்து பிரஷர் பான் யை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
இதற்கு சிறந்த சைடு டிஷ் உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை:
வேகவைத்த உருளை 2
குழம்பு தூள் அல்லது சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
வெங்காயம் அரிந்தது 1
தக்காளி 1
கறிவேய்பில்லை
உப்பு
எண்ணெய்
கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேய்பில்லை, வெங்காயம், தக்காளி என்று ஒன்று ஒன்றாக சேர்த்து வதக்கவும். பிறகு குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். உருளையை வெட்டி சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து வதக்கவும். கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.