Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts

Tuesday, 21 September 2010

பூண்டு சட்னி - Garlic Chutney

தேவையானவை:


பூண்டு உரித்தது : 25 பல்
மிளகாய் : 10
புளி : கோலி அளவு
நல்லெண்ணெய்
உப்பு
பெருங்காயம்
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை


செய்முறை :


கடாயில் தனி தனியாக மிளகாய் , பூண்டு , புளி, கறிவேப்பிலை வறுத்து உப்புடன் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.


நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து கலக்கவும்.


காரம் அதிகம் இருந்தால் சாப்பிடும் போது எண்ணெய் கலந்து சாப்பிடவும்


சூடான இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.





கடுகு சட்னி - Musturd Seeds Chutney

தேவையானவை:



கொப்பரை தேங்காய் /முற்றிய தேங்காய் : 1 மூடி  
உளுத்தம்பருப்பு : 3 ஸ்பூன்
மிளகாய் : 3/4 தேவைகேற்ப
கடுகு
எண்ணெய் 
கறிவேப்பிலை
உப்பு


செய்முறை:


கடாயில் எண்ணெய் விட்டு 1 1/2 ஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். தாளித்தில் பாதி கடுகை மட்டும் கறிவேப்பிலை இல்லாமல் மிக்ஸியில் கொட்டவும்.  


கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு தனி தனியாக மிளகாய், உளுத்தம்பருப்பு வறுக்கவும். பிறகு தேங்காயை பல் பல்லாக போடு சிவக்க வறுத்து உப்பு சேர்த்து தனியே எடுத்து வைத்த கடுகுடன் நன்றாக அரைத்து மீதி கடுகை சேர்த்து கலக்கவும். 


இது தோசையுடன் நன்றாக இருக்கும்.