Thursday, 5 May 2011

மிளகு குழம்பு

வறுத்து  அரைக்க

மிளகு - 3 ஸ்பூன்
சீரகம் - 3 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
---------------------------------------------------
புளி - சிறிய எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை
பூண்டு - 20 பல்

நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி
முருங்கை காய் -1 
வெங்காய வடகம் (optional)
வெந்தயம் - 10 nos
உப்பு தேவையான அளவு.


செய்முறை:
எண்ணை விடாமல் வெறும் வாணலியில் வறுக்க கொடுத்துள்ளதை வறுத்து பொடித்து கொள்ளவும். புளியை குறைவான நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். அதனுடன் வறுத்து அரைத்துள்ள பொடியை  கலந்து கரைக்கவும், அதனுடன் உப்பும் சேர்த்து தனியே வைத்து விட்டு , வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காய வடகம் கொஞ்சம் வெந்தயம் சேர்த்து தாளித்து விட்டு பூண்டை சேர்க்கவும். பூண்டு நிறம் மாறியதும் கரைசலை சேர்த்து மூடி போட்டு 6 நிமிடம் கொதிக்க விடவும். பச்சை வாடை போனவுடன் முருங்கை காய் சேர்த்து கொதிக்க வைத்து காய் வெந்தவுடன் இறக்கவும். கடைசியாக கருவேப்பிலை போட்டு மூடவும்.


 குறிப்பு: 
புளியை கெட்டியாக கரைப்பதால் சீக்கிரம் கொதித்து விடும். கடைசியாக தான் காய் சேர்க்க வேணும். மிளகு சூட்டை அதிகரிக்கும். சாப்பிட்டதும் நீர் நிறைய அருந்தவும்.



SIDE DISH: 
அப்பளம், வற்றல், பருப்பு உசிலி.