Friday 17 September 2010

இட்லி மிளகாய் பொடி - Chilly Powder

தேவையானவை :
மிளகாய் – 50 கிராம்
தனியா/கொத்துமல்லி – ஒரு கைப்பிடி
கருப்பு உளுந்து – 150 கிராம்
கருப்பு எள் – 10 கிராம்/2 ஸ்பூன்
கடலை பருப்பு- 75 கிராம்
கட்டி பெருங்காயம் – சிறிது
கல் உப்பு
எண்ணெய்
செய்முறை:
(ஒவ்வொன்றையும் வறுத்த பிறகு தனியே வைக்கவும்)
கனமான வாணலியில் ஒரு ஸ்பூன் விட்டு எண்ணெய் விட்டு முதலில் மிளகாயை வறுக்கவும்.
கருப்பு உளுந்தை நன்கு வறுக்கவும்.(உளுந்து சிவக்க ஆரம்பிக்கும் போதே எடுத்திடனும்)
கடலை பருப்பை நல்லா பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும்
பிறகு கொத்தமல்லியை போட்டு வறுக்கவும்.
பெருங்கயத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து பொரிக்கவும்.
எள்ளை போட்டு சிறுது நேரத்திலே வெடிக்க ஆரம்பித்து விடும். அடுப்பை உடனடியாக நிறுத்தி வேறு பாத்திரத்துக்கு மாத்தவும்.
பிறகு கல் உப்பை வாணலியில் சேர்த்து சிறிது நேரம் வைத்து பிறகு எடுத்து விடலாம்.
ஆறிய பிறகு முதலில் மிளகாய் போட்டு அரைக்கவும், பெரிய பாத்திரத்தில் கொட்டவும். உளுந்தை சற்று கரகரப்பா அரைத்து சேர்க்கவும். மீதியை ஒன்றாக கொட்டி நன்கு நைசாக அரைத்து நன்கு கிளறவும்.
பின் குறிப்பு:
கறிவேப்பிலை சேர்த்து செய்தால் சுவை கூடும். ( இதற்கு கறிவேப்பிலையை நன்கு நிழலில் உலர்த்தி வறுக்கவும் பச்சையாக வறுக்க கூடாது)
5/6 பூண்டு பல்லை தோலோடு வறுத்து அரைக்கலாம். (இது ரொம்ப நாளைக்கு வைத்து உபயோகிக்க முடியாது, ஒரு மாதம் வரை இருக்கும்)
கொத்தமல்லி சுவையை கூட்டும், சுவையை குறைக்காது.விருப்பம் இல்லை என்றால் தவிர்த்து விடவும். பெருங்காயம் நிறைய சேர்த்தல் நலம்.

No comments: