Thursday, 16 September 2010

உளுந்து களி

தேவையானவை :
உளுந்து 200 கிராம்
வெல்லம் 200 கிராம்
நல்லணெய் 150 மி.லி
உப்பு சிறிது
ஏலக்காய் தேவைப்பட்டால்



செய்முறை :
உளுந்தை தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பது போல் அரைத்து அடுப்பில் அடி கனமான வாணலி வைத்து நன்றாக கிளறவும். (இரும்பு வாணலியில் பண்ணும் போது சுவை அதிகரிக்கும்)  கட்டிபிடிக்காமல் கிளறிவிட்டு வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் இளகி மாவு நன்றாக வேக வேண்டும் ஒரு ஸ்பூனில் கால்வாசி உப்பை சேர்க்கவும். பிறகு கெட்டியாகி வரும் போது நல்லணெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும் எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் அடுப்பை நிறுத்தவும். இப்போது ஏலக்காய் அப்படியே பொடித்து எண்ணெயில் சேர்க்கவும். எண்ணெய் பிரிய எடுத்தால் தான் 4 5 நாள் வரை கெடாமலிருக்கும்.
  

3 comments:

Jaleela Kamal said...

நல்ல குறிப்பு பிரியா

Anonymous said...

nanri jaleela akka.

Anonymous said...

romba naal aasai enaku ithu sapidanum endru,,
i will try ..